24 August 2014

ஆலய பொதுக் கூட்ட உடன்படிக்கை

சகல அம்பாள் அடியார்களுக்கும்..........

ஆலய பரிபாலன சபையின் விசேட பொதுக் கூட்டம் 2014

ஆலய காணி உடன்படிக்கை தொடர்பான விசேட பொதுக் கூட்டம் 17.08.2014 அன்று பொலிகண்டி கிராம சேவையாளர் , பருத்தித்துறை பிரதேச செயலக தலைமை

கிராம சேவையாளர் , கலாசாரஉத்தியோகத்தர் ஆகியோர் முன்னிலையில் ஆலய முன்றலில் பிற்பகல் 4.00 மணியளவில் தலைவர் கூட்டத்தினை ஆரம்பித்து வைக்க தொடர்ந்து தலைமைக் கிராம செயலரினால்
கூட்டம் நடாத்தப்பட்டது. இதில் 65 இற்கும் மேற்பட்ட அம்பாள் அடியார்கள் கலந்து கொண்டனர். அத்துடன் புலம்பெயந்து வாழும் அம்பாள் அடியார்களும் இக் கூட்டத்துக்கு தங்கள் கருத்துக்களை மின் அஞ்சல் ஊடாக அனுப்பி வைத்திருந்தனர்.

# அன்றைய கூட்டத்தில் காணி உடன்படிக்கையுடன் சம்பத்தப் பட்டவர்கள் அனைவரும் உடன்படிக்கையில் தவறுகள் இருப்பதை ஏற்றுக் கொண்டு அதனை மார்கழி மாதமளவில் இரத்துச் செய்வதற்கும் அதற்கு ஆலய நிதியில் இருந்து செலவழிக்கப்பட்ட நிதியினை உடனடியாக ஈடு செய்வதற்கும் உறுதிப்படுத்திய கடிதங்களை தந்திருந்தனர். அதன் பிரதிகள் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

# காணி உடன்படிக்கையுடன் தொடர்புடைய தற்போதைய நிர்வாகத்தில் இருக்கும் தலைவர் , உபதலைவர், பொருளாளர் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதங்களை சமர்ப்பித்திருந்தனர்.

# திரு க.கலைமோகன் அவர்களினால் தரப்பட்ட கடித்ததுக்குரிய பதில்களும் அன்று அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

நன்றி.

கி.அருள்நாதர்
செயலாளர்- பரிபாலனசபை